தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழகத்தின் உதவி அவசியம்: சுரேஷ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈழ மக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்புகளின் போது, தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கு மாகாண சபையில் நிலவும் சர்ச்சை நிலை மற்றும் புதிய அரசியல் சாசனம் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பன தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *