மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க தீர்மானம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கை வகித்து வந்த மயலிட்டி துறைமுகமானது, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினர் வசமிருந்தது.

குறித்த துறைமுகத்தையும் அதனை அண்டியுள்ள காணிகளையும் விடுவிக்கும் பட்சத்தில், அம் மக்களின் ஜீவனோபாயத்தை விருத்தி செய்ய உதவுமென பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தையிட்டி வடக்கு ஜே/249 கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியை மக்களின் பாவனைக்காக கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *