Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்

கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும்.

கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. எனினும் மீண்டும் இவ்வாறான நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் தரப்புக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இச்சம்பவங்கள் குறித்த விசாரணைகளைத் துரிதப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …