உண்மை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படும்; ஹர்ஷ டி சில்வா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் ஒரு இலகுவான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனவாதிகள் மற்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்களின் தடைகளைத் தாண்டி, இதனை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு வேகமாக நல்லிணக்கத்தை அடைய முடியுமோ அந்தளவுக்கு வேகமாக தாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் ஜனநாயக அமைப்புக்குள் தான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானம் மற்றும் அரசியலமைப்பு திருத்த முயற்சிகளை முன்வைத்து, மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களைத் தூண்டி விடுவதற்கு சிங்கள, தமிழ் இனவாதிகள் முயற்சித்தாலும், அனைத்துலக சமூகத்திடம் இருந்து ஸ்ரீலங்காவுக்கு அழுத்தங்கள் ஏதும் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

காணாமற்போனோர் பணியக சட்டம் பொருத்தமான அமைச்சின் ஊடாக வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *