புதிய அரசியலமைப்பே தேவை, திருத்தம் அல்ல : ஹக்கீம்

தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *