சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ”இதயம்” சின்னத்தினை பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பொன்சேகாவின் நெருக்கமான ஒருவரான சேனக்க என்பவருக்குச் சொந்தமான ”அப்பே ஜாதிக பெரமுன ” என்ற கட்சியின் பெயரை மாற்றி ” ஜாதிக்க சமகி பலவேகய ” என்று பெயரிடவும் அந்தக் கட்சியின் தொலைபேசி சின்னத்தை மாற்றி இதயம் சின்னத்தை பயன்படுத்தவும் சஜித் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது .

ஆனால் இந்த கோரிக்கை கிரமப்படி விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர், முறையான ஆவணங்களுடன் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து பரிசீலனை செய்யமுடியுமென சஜித் தரப்புக்கு அறிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News