நாடு திரும்பினார் பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நாடு திரும்பினார் பிரதமர்

இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த இன்று நாடு திரும்பியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றார்.

இந்நிலையில் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் 12.45 அளவில் நாடு திரும்பினார்.

அவரின் இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டதுடன் , காசி மற்றும் புத்தகயா உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மேலும் இந்திய குடியரசுத்தலைவர், பாரத பிரதமர், இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News