செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!
ஆதியும் அந்தம் இல்லா அரும்பெரும் மதமாக மேன்மையுறும் இந்து மதம் தனின் வழிபாட்டு முறைமைகளில் இந்து மக்களால் தவறாது கடைப்பிடிக்கப்படுபவை விரதங்கள் ஆகும். விரதம் என்பது எம் மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவன் திருவருளை பெற்றுக் கொள்வதற்கு நாம் இயற்றும் ஒரு வழிபாட்டு முறையாகும். இத்தகு விரதங்கள் பல எம் இந்து மதத்தவரால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கடவுளுக்கு என்று பல விரதங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை அனைத்தும் இறைவன் திருவருளை பெறுதல் எனும் தத்துவத்தையே உணர்த்தி நிற்கின்றன. இத்தகு விரதங்களில் உயர்வானதும், சிறப்புக்குரியது மான விரதம் வரலட்சுமி விரதமாகும்.
இந்த விதரதம் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முதல் வெள்ளிக்கி ழமை கடைப் பிடிக்கப்படுகிறது.
மேலும் இந்த விரதம் செல்வபோகங்களைப் பெறுவதற்கும், புத்திர பாக்கியம் உண்டாகுவதற்கும், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறுவதற்கும், திருமணம் ஆன பெண்களின்மாங்கல்யம் நிலைத்திருப்பதற் கும்,வாழ்வில் மகிழ்ச்சி பொங்குவதற்கும் என இந்த விரதம் கடைப்பி டிக்கப் ப டுகிறது.
மகாலட்சுமியின் தோற்றம்
ஒரு முறை அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடல் கடைந்தனர். அப்போது அந்த பாற்கடலில் இருந்து பல தெய்வீகமான வஸ்துக்கள் வெளிவந்தன.
அவற்றைத் தொடர்ந்து அழகெல்லாம் ஒருங்கே பெற்ற மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியவரே மகாலட்சுமி தேவி. அவ்வாறு தோன்றி மகாலட்சுமிக்குத் தேவர்களின் தலைவன் இரத்தினமயமான பீடம் ஒன்றை அளித்தான். மேலும், அங்கிருந்த தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் மகாலட்சுமியைப் போற்றித் துதித்தனர். தன் திருக்கரத்தில் செல்வம் பொழியும் கலசத்துடன் தோன்றியவர் திருமகள்.
அக்கணமே காத்தல் கடவுளாம் விஷ்ணுவைத் தன் கணவான தேர்ந்தெடுத்து அவருக்கே மணமாலை சூடி அந் நாராயணன் இதயக்கமலத்தில் அமர்ந்து கொண்டாள். பாற்கடலிடைப் பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள் ஏற்குமோர் தாமரைப்பூ அதில் இணை மலர்த் திருவடி இசைந்திருப்பாள்.
நாற்க் கரம் தானுடையாள்அந்த
நான்கினும் பல வகைத் திருவுடையாள்
வேற் கரு விழியுடையாள் செய்ய
மேனியள் பசுமையை விரும்புபவள் என திருமகளாம் லட்சுமியின் பிறப்பைப் போற்றிப் பாடுகின்றார் மகாகவி பாரதியார்.
வரலட்சுமி விரதத்தின் கதையாடல்
நிலவுலகில் பத்ரசரவஸ் எனும் மன்னன் மகத நாட்டை ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி சுசந்திரா ஆவள். தான் மகாராணி என்பதாலும் செல்வ மமதையாலும் மகாலட்சுமியை அவமதித்து வந்தாள். இதனால் காலப் போக்கில் அனைத்து செல்வங்களையும் இழந்து துன்பத்தால் வருந்தினாள். இந்த நிலையில் அவள் மகள் சாருமதி. ஆவள் தெய்வ நம்பிக்கை கொண்டவள். மகாலட்சுமியின் கிருபையினால் எல்லா செல்வங்களும் பெற்று நல் துணைவனையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். ஒரு முறை மகாலட்சுமி சாருமதியின் கனவில் தோன்றி வரலட்சுமி விரதம் கடைப்பி டிக்கும் வழிமுறையை எடுத்துரைத்து அதை கடைபிடிக்கும் படியும், உன் தாயிடம் இது பற்றிக் கூறும்படியும் சொல்லி மறைத்தாள். சாருமதியும் தாயிடம் சென்று வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறையைக் கூறினாள். அதன்படி சுசந்திராவும் தன் தவறை உணர்ந்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்தாள். இதன் காரணமாக இழந்த செல்வங்கள் எல்லாம் மீண்டும் கிடைக்கப்பெற்றால் என்கின்றது புராணக் கதையாடல்.
அருள் புரியும் அஷ்டலட்சுமிகள்
மகாலட்சுமி அஷ்டலட்சுமிகளாக வடிவம் தாங்கி திருவருள் பாலிக்கின்றாள். அத்தகு அஷ்டலட்சுமிகளை பின்வருமாறு கண்ணுறலாம். ஆதிலட்சுமி, விஜயலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி ஆகியோரே அவர்களாவர். இவ் அஷ்டலட்சுமிகளை வழிபட்டால் நலன்கள் யாவும் பெற்றிட முடியும். இத்தகு அஷ்டலட்சுமிகளின் அருளும், கிருபையும் எம் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் எனில் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால்போதும்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை
இந்த விரதம் அதிகளவில் விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும். மேலும் அம்பாள் ஆலயங்களிலும் கடைப்பிடிக்கப்படும். ஆலயங்களில் திருவிளக்குப் பூஜையுடன் விரத்தினை உரிய நியதிப்படி அனுஷ்டிக்கலாம். எனினும் ஆலயங்களுக்குச் சென்று விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள் தம் வீடுகளில் உரிய முறைப்படி இவ் விரதத்தை கடைப்பிடிக்க முடியும்.
அதாவது இந் நாளில் வீட்டினை தூய்மைப் படுத்தி வீட்டு வாசலில் கோலம் ஈட்டு சுவாமி அறையில் கும்பம் வைத்து,பூக்கள், பூமாலைகள் சாற்றி நைவேத்தியங்களை படையல் செய்து, திரு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்வதுடன், மகாலட்சுமி அஷ் டோத்திரம், மகாலட்சுமி பாடல்களை உச்சரித்து நோன்புக் காப்பைக் கையில் அணிந்து விரத்தை நிறைவு செய்யலாம்.
வரலட்சுமி தேவியின் திருவருள்
ஆகவே இத்தகைய சிறப்புக்கள் பலவற்றை கொண்டு விளங்குகின்ற இந்த வரலட்சுமி விரதத்தை திருமணமான பெண்கள், கன்னிப் பெண்கள் மற்றும் விரதம் கடைப்பிடிக்க விரும்புகின்றவர்கள் என அனைவரும் உரிய முறைப்படி கடைப்பிடித்து பாற்கடல் அவதரித்து விஷ்ணுவின் இதயக்கமலத்தில் வீற்றி ருக்கின்ற ஸ்ரீ தேவியாம் மகாலட்சுமியின் திருவருள் துணை பெற்று சகல நலன்களையும் பெற்று இந்த வையகத்தில் இன்புற்று வாழ்வோமாக.