கண்டுபிடிக்க முடியாத படி மாறிப்போன ரஜினிகாந்த்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான பேட்ட வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. அண்மையில் சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த 2.0 வெளியாகி பெரும் வசூல் சாதனை நிகழ்த்தி விட்டது.

அதே வேளையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் முருகதாஸ் உடன் தான் என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மற்றொரு பக்கம் அவரின் அரசியல் வேலைகளும் நிகழ்ந்து வருகின்றன.
[ads1]
இதற்கிடையில் ரஜினி ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது. ரஜினி ஸ்வெட்டர் போட்டு தலையில் குல்லா அணிந்து கண்டுபிடிக்க முடியாத படி நியூயார் நகரில் பொது இடத்திற்கு சென்றுள்ளார்.

ஆனாலும் அவரின் அடையாளம் கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் வெளியானது.