சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்ககோரி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

 

Tamil Technology News

 

Tamilnadu News