Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!

தமிழர்களின் அதிகார்பபூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களது உடலங்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமிலங்கள் 2018 நவம்பர் 27 மாவீர் நாளினை முன்னிட்டுசிரமதான பணிகள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன

அதனடிப்படையில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்

அந்தவவையில் இன்று 20.10.18 அன்று காலை 8.30 மணிக்கு வட தமிழீழம் முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கை மாவீரர்களது பெற்றோர்கள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பிரதேச மக்கள் நலன்விருன்பிகள் பலரும் கலந்து கொண்டு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv