Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்பந்தன் பதவி விலக வேண்டும்

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது.

என்ற விடயத்தினை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நிரூபித்து விட்டனர். தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல இ அவர்கள் பிரதமரின் கைபாவை பொம்மைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில தெளிவுப்படுத்தும் போது மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv