கண்டி வன்முறை: மூன்று குழுக்கள் குறித்து தீவிர விசாரணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன், அரசியல் கட்சிகள் அடங்கிய 3 குழுக்கள் செயற்பட்டுள்ளமை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த பலர் கைதாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சில அரசியல் கட்சிகளும் இந்தக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டிருப்பதாக புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.