Sunday , August 24 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி

மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி

இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி கடும் கோபத்தில் பேசி வருகிறார்.

இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவு அமளியில் ஈடுபட்டனர்.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தாமல் கோபமாக பேசி வருகிறார். மிகவும் உரத்த குரலில் பேசி வரும் பிரதமர் மோடியின் முகத்தில் கடும் கோபம் தெரிகிறது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv