திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ்
தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் நாளை வழங்குகிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. தனி மாநிலத்துக்காக போராடிய தெலுங்கானா ராட்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் அம்மாநில முதல்-மந்திரியாக உள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கு நகை காணிக்கை செலுத்துவதாக சந்திரசேகரராவ் வேண்டி கொண்டார்.
இதையடுத்து நகைகள் செய்வதற்காக ரூ.5 கோடியை திருப்பதி தேவஸ்தானத்திடம் முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார். இந்த நகைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
நகைகளை நாளை சந்திரசேகரராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்.
இன்று மாலை 4.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்களுடன் ரேணிகுண்டா செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார்கள்.
இன்று இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை ஏழுமலையானை தரிசனம் செய்து ரூ.5 கோடி நகையை காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.