ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அரசியலுக்கு வரும் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார். அவரது அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *