ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முதன்முதலில் தமிழில் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்
சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது
வடிவுடையான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக சன்னிலியோனுக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.