Sunday , November 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமது கட்சி ஈடுபட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட,கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உயிரைப் போல நீரைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விசேட வேலைத்திட்டமொன்றை நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கண்டி – டோமலி விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வட,கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உதயமானதாகக் கூறினார்.

குறித்த இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் இன்றும் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அவ்வாறு இருமாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையைப் பெற வேண்டும் என்று தெரிவித்த அவர், அந்தப் பெறும்பான்மையைக்கூட பெறமுடியாத அளவில்தான் நாடாளுமன்றத்திலும் நிலைப்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே வடக்கு, கிழக்கை இணைக்காமல் பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …