ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தலிபான் பயங்கரவாதிகள் தப்பிவிட்டனர் என கூறப்படுகிறது.

இருப்பினும் போலீஸ் தரப்பில் இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஞாயிறு அன்றும கந்தகாரில் வெளிநாட்டு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *