சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் உடனே நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு நீதிமன்றம் அறை எண் 48-ல் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.