அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது.

இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் இருந்து திசை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

நிகழாண்டில் மட்டும் 1,300 முறை அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர்.

175 பேர் காயம் அடைந்துள்ளனர்.இந்தியா இத்தகைய அத்துமீறலை கைவிட வேண்டும். எங்களது நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *