கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய தென் மாகாணப் பகுதிகளிலும் பதுளையிலும் சற்று முன் வீச ஆரம்பித்திருக்கும் கடும் காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் அப்பகுதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் கரையோர புகையிரதப் போக்குவரத்தும் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

தற்போது வீசிவரும் கடும் காற்று நாளை பகல் வரை வீசலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *