சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக இசை அமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீதான அதிருப்தியை தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் சசிகலாவிற்கு எதிரான தனது அனுபவங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இசை அமைப்பாளர் கங்கை அமரன், தான் சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சொத்துக்களை பறிப்பதில் உடந்தையாக இருந்தவர் ஆட்சியில் அமர்வதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites