மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் வீடு முன்பு அவரது ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், முதல்வர் பன்னீர்செல்வம் வீடு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.










