உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தடையால் பிரிண்டிங் பிரஸ் தொழில் பாதிப்பு அடையும் என்றும் கருத்து கூறப்பட்டது
இந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க விடப்பட்ட கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.