தேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலன் கருதி தேயிலை செடியின் பாராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

மேலும் தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காட்டு மிருகங்கள் மற்றும் குளவி தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து சுமார் 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *