Monday , December 23 2024
Home / முக்கிய செய்திகள் / கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் கடந்த வருடம் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரி­வித்தார்.
றூவிஷன் நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை கல்வி அபி­வி­ருத்தி கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அட்­டா­ளைச்­சேனை ஒஸ்றா மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அதி­க­மான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களில் 70 வீதமா­னவை குடும்ப உற­வி­னர்­க­ளி­னா­லேயே ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. வறுமை மற்றும் பெண்­களின் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு போன்ற கார­ணங்­க­ளி­னா­லேயே அதி­க­ள­வி­லான சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவர்­களின் கல்வி, சுகா­தாரம் மற்றும் பாது­காப்பு என்­ப­ன­வற்­றிலும் இது அதிக தாக்கம் செலுத்­து­கின்­றது. இலங்­கையின் கல்வி அறிவுச் சுட்டெண் உயர்ந்த நிலையில் அமைந்­துள்ள போதிலும் சுமார் 50,000 சிறு­வர்கள் முற்றாக பாட­சாலை செல்­லா­துள்­ளனர். மேலும் 450,000 சிறு­வர்கள் பாட­சாலை இடை­வி­லகி நிற்­ப­தா­கவும் யுனிசெப் நிறுவனம் தகவல் தெரி­விக்­கின்­றது.

இலங்­கையில் 2016 ஆம் ஆண்டில் 2036 வன்புணர்வு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் 350 சம்­ப­வங்கள் மட்­டுமே 16 வய­துக்கு மேற்­பட்­ட­வை­க­ளாகும். ஏனை­ய­வைகள் சிறுவர் தொடர்­பா­ன­வை­யா­கவும் 68 வீத­மானோர் தங்­க­ளது விருப்­பத்­து­ட­னேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்­கையில் சிறுவர் தொடர்­பான 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்­டனை சட்­டக்­கோவை மற்றும் 1995 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்­டனைச் சட்டக் கோவை என்­பன சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பில் வலு­வாக அமைந்­துள்­ளது. இதன் மூலம் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பில ஆகக் குறைந்த தண்­ட­னை­யாக 6 வருட சிறைத் தண்­ட­னையும் ஆகக் கூடி­யது 15 வரு­ட­மா­கவும் அமைந்­துள்­ளது என்றார்.

இந்­நி­கழ்வில் அட்­டா­ளைச்சேைன பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. முக்தார், கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி எம்.எச்.எம். உவைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv