வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து வவுனியா மத்திய பேரூந்து நிலையம் , மணிக்கூட்டுச்சந்தி , புகையிரத நிலைய வீதி , நூலக வீதி, பூங்கா வீதி , நகரசபை வீதி , ஏ -9 வீதி போன்ற பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு செல்லும் பாதையனைத்தும் மூடப்பட்டதுடன் அதிகாரிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *