Monday , December 23 2024
Home / சினிமா செய்திகள் / விஜய் ரசிகை என்பதை நிரூபித்த காயத்ரி ரகுராம்

விஜய் ரசிகை என்பதை நிரூபித்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் தான் ஒரு விஜய் ரசிகை என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் ஒரு விஜய் ரசிகை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

அதிலும் அவர் பதிலடி கொடுத்தது தமிழிக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழிசை செளந்திரராஜனுக்கு தனது டுவிட்டர் மூலம் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமாவை சினிமாவாக ஒரு பொழுதுபோக்காக பாருங்கள். படத்தில் வரும் நடிகர் பேசும் வசனங்களை அவர் எழுதுவதில்லை., அவர் ஒரு உண்மையான டாக்டரோ, மேஜிக்மேனோ இல்லை. சினிமா, அரசியல் இரண்டிலும் விமர்சனங்களை ஏற்று கொள்ள வேண்டும். கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. மேலும் இந்த படம் சென்சாரில் சான்றிதழ் வாங்கியுள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.

தமிழிசை செளந்திரராஜனுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம் பாஜகவின் நிர்வாகிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …