Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!

நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!

நிலவேம்புக் குடிநீர் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என ரசிகர் மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இதர பணிகளை தொடரலாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அலோபதி மருத்துவர்கள்தான் நிலவேம்பு தொடர்பான ஆராய்ச்சியை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள கமல், மருந்துகளுக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் என பதிவிட்டுள்ளார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …