உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்திருந்தது. தமிழரசுக் கட்சியிடம் அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது