இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை அமெரிக்கா நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டியதற்காக அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறை குறித்து இருவரும் விவாதித்ததாகவும் தெரிகிறது.
https://www.youtube.com/watch?v=LXs5JDOROyc