சூனியக்காரி என்று பெண் அடித்துக்கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கெர்கி. இங்கு வசித்து வந்தவர் கன்யா தேவி. வயது 40. இவரது கணவர் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார்.

இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்த அவரை, உறவினர்கள் சூனியக்காரி என்ற கூறினர். இதையடுத்து அவரை அடித்துக் கொடுமைப் படுத்தி, மனிதக் கழிவை சாப்பிட வைத்தனர்.

பின்னர் சாகும்வரை அடித்தேக் கொன்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. இது அந்தப் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவருக்கு கடந்த 10-ம் தேதிதான் தெரியவந்தது. அவர் போலீசில் புகார் செய்தார்.

அதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து இறந்து போன பெண்ணின் மகள் கொடுத்த புகாரை அடுத்து அவரின் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *