அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கில் போராட்டங்கள்! 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அதற்குக்  காரணமானவர்களை நீதித்துறைமுன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *