Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பில் கூட்டாட்சி என்ற விடயத்தை இணைக்க அரசாங்கம் மறுப்பதோடு, ஒற்றையாட்சி என்ற சொல்லை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் பட்சத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அதிகாரம் அதிகரித்துச் செல்லும் அதே சந்தர்ப்பத்தில், சிறுபான்மையினரின் அதிகாரங்கள் படிப்படியாக குறைவடைந்து செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒற்றையாட்சி என்பதற்கு பதிலாக ‘ஒன்றிணைந்த’ என்ற சொல்லை பயன்படுத்துமாறு தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv