வடகொரியாவை விரைவில் அழித்துவிடுவோம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட கொரியாவை அழித்து விடுவேன் என டிரம்ப் மிரட்டினார். உடனே கிம் ஜாங் அன், “டிரம்புக்கு மனநிலை பாதித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார்.

அதற்கு டிரம்ப், “ கிம் ஜாங் அன் பைத்தியக்காரர். சொந்த மக்களையே பட்டினி போடுகிறார் அல்லது கொல்கிறார். இதுவரையில் இல்லாத வகையில் அவர் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்” என எச்சரித்தார்.

இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஐ.நா.சபையில் பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி, ‘டிரம்புக்கு மனநிலை சரியில்லை. அவரது மிரட்டல்கள் இரு நாடுகளுக்கிடையே ராணுவ மோதலை தூண்டிவிடுவதாக இருக்கிறது’, என பேசினார். மேலும் டிரம்பை ‘துக்கத்தின் தளபதி’, ‘பொய் மன்னர்’, ‘தீய அதிபர்’ என குறிப்பிட்டார்.

இதற்கு டிரம்ப் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “ஐ.நா.வில் வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி பேசியதை இப்போதுதான் கேட்டேன். அவர் குட்டி ராக்கெட் மனிதரின் எண்ணங்களை எதிரொலித்து பேசினால், அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள்”, என கூறியுள்ளார்.

டிரம்ப்பின் இந்த மிரட்டல் ஏற்கனவே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=lsUG5_DuWTQ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *