தேர்தல் தோல்வியை அறிந்ததும் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பெண் பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது.

ஆனால் எதிர்பார்த்தது போன்று முடிவு வெளியாகவில்லை. ஆட்சி அமைக்கும் அளவு ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது.

இத்தகைய பின்னடைவால் தெரசா மேவுக்கு ஆளும் கன்சர்வேடில் கட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தெரசா மே பதவி விலக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது அவரை கணவர் பிலிப் ஆறுதலாக கட்டியணைத்து தேற்றினார்.

இத்தகவலை தெரசா மே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். தனது பிரசாரம் சரியில்லாததால் தான் தேர்தலில் சரிவு ஏற்பட்டது என கூறும் அவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய உள்ளது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *