ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வாஷிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய போர் உத்திகள் குறித்து விவரித்தார். இந்த உரை தொலைக்காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பானது.

அப்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதிய அணுகுமுறையை வரையறுத்திருக்கிறோம்.

யுத்தம் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம்’எனத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் குறித்து, முந்தைய அதிபர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த ட்ரம்ப், தற்போது அவர்களின் நடவடிக்கையைத் தொடருவதற்கு முடிவு செய்திருக்கிறார்.

எனினும் ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலாக எவ்வளவு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தற்போது சுமார் 8,500 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில்இருக்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *