தென் கொரியா: கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தென் கொரியா நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டேங்கர் வெடித்த விபத்தில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தகப் பகுதியான ஜின்ஹானே என்ற நகரில் எஸ்.டி.எக்ஸ். ஆஃப்ஷோர் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த ஆர்டருக்காக 74 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் மாதத்துக்குள் இந்த கப்பலுக்காக ஆர்டர் அளித்திருந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியுள்ளதால் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில், கப்பலின் ஒரு பகுதிக்கு பெயிண்ட் பூசும் பணியில் இன்று சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கப்பலுக்குள் இருந்த ஒரு டேங்கர் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *