டிரம்ப் தாக்குதல் மிரட்டல்: அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்களுக்கு அந்நாட்டு ராணுவம் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து வருகிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். ஹியூகோ சாவேஸ் மறைவுக்கு பின் 2013-ம் ஆண்டு முதல் இப்பதவியை அவர் வகிக்கிறார்.

வெனிசுலா எண்ணை வளமிக்க நாடு. சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவால் இதன் பொருளதார நிலை சீர் குலைந்தது. உணவு பொருட்கள் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் எழுந்தன.

எனவே மதுரோ பதவி விலக வேண்டும் என எதிர்க்ககட்சிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் மறுத்ததை தொடர்ந்து போராட்டங்களும், வன் முறை சம்பவங்களும் வெடித்தன. இதுவரை அங்கு 125 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் வெனிசுலாவில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனவே பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர மதுரோ பதவி விலக வேண்டும். இல்லாவிடில் ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இம்மாத தொடக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

வெனிசுலா மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் மதுரோ தனது அரசை கவிழ்த்து விட்டு வெனிசுலாவின் எண்ணை வளத்தை அமெரிக்கா அபகரிக்க திட்டமிட்டுள்ளது. ஒரு பொருளாதார குற்றம் என்றார்.

இதற்கிடையே, வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் எண்ணம் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர் தெரிவித்தார்.

வெனிசுலாவுக்கு எப்போதும் இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இல்லை. இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவுடன் போரிட வெனிசுலா தயாராகி வருகிறது.

அதற்கு முன்னோடியாக வெனிசுலாவில் இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை ராணுவம் அளித்து வருகிறது. துப்பாக்கி சுடுதலுடன் ஏவுகணைகைளை சுட்டு விழ்த்துதல், போர் பயிற்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

ராணுவ பயிற்சியை அதிபர் நிகோலஸ் மதுரோ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *