நைஜீரியா: 30 மீனவர்களை கொன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்கு வசிக்கும் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன.

மேலும், அரசுக்கு எதிராக பல்வேறு பகுதிகளும், அண்டை நாடுகளிலும் வெடிகுண்டுதாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் பண்ணாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், சமீப காலமாக இவர்களது செயல்பாடுகள் முன்பை விட வேகமாக உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதிகளில் உள்ள பல் கிராமங்களில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றுள்ளதாக அம்மாகாண கவர்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்திலிருந்து போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *