ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
“ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையை சஜித் அணி பலவீனமாக கருதக்கூடாது. புதிய கட்சியில் இணைபவர்களின் பதவிகள் பறிக்கப்படும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் ஆதரவு அணி உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” ஐக்கிய தேசியக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதிய கட்சியில் இணையமுடியாது. அவ்வாறு செய்தால் அவர்களின் அமைப்பாளர் பதவி உட்பட கட்சியில் வகிக்கும் அதிகாரப்பூர்வ பதவிகள் எல்லாம் பறிக்கப்படும். கட்சி யாப்பிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐக்கிய தேசியக்கட்சி மௌனம் காப்பது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மோதலுக்கு செல்லவேண்டாம், கட்சியின் நலன்கருதி இணைந்து பயணிக்க இறுதிவரை வாய்ப்பளிக்குமாறு கட்சி தலைவர் எங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே, தலைவர் உட்பட எங்களின் பொறுமையை எவரும் பலவீனமாகக் கருதிவிடக்கூடாது. புது வழியில் பயணிக்க நாமும் தயாராகவே இருக்கின்றோம்.
அதேபோல் கட்சியை மதிக்க தெரியாத, யாப்பின்பிரகாரம் செயற்படாத தரப்புகளுக்கு மக்கள் வாக்களிக்ககூடாது.” – என்றார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை
-
கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு
-
பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா!
-
யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்
-
ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்
-
சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்
-
இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!
-
சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்
-
கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு
-
டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!