Friday , April 12 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் வலுத்துள்ள நிலையில் ரணில் மற்றும் சஜித் அணிகளை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலை ஓரணியாக எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனால் இரு அணிகளுமே தனிவழிப் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தமது கட்சி யானை சின்னத்தின்கீழ் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்,தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் என்ற அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சஜித் அணி அறிவித்தது. இந்நிலையில் இரு அணிகளையும் இணைக்கும் கடைசிகட்ட முயற்சியில் கருஜயசூரியவும், ராஜித சேனாரத்னவும் ஈடுபட்டனர்.

இதற்காக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு அணிகளில் இருந்தும் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

எனினும் யாப்பு உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனால் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இதனை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரு அணிகளுமே உறுதிப்படுத்தின. அத்துடன், சரமாரியாக சொற்கணைகளையும் தொடுத்துக்கொண்டன.

சஜித் அணி…….

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுஜீவ சேனசிங்க,

” ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் கருஜயசூரிய தலைமையில் நேற்றிரவு ( நேற்று முன்தினம்) சந்திப்பு நடைபெற்றது. யாப்பு உட்பட சட்டரீதியான ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி யானை சின்னத்தில் போட்டியிடுவதையே ரணில் தரப்பு விரும்புகிறது. இறுதியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் எமது முடிவு அறிவிக்கப்பட்டது.

மத்தியஸ்தராகவே கருஜயசூரிய பங்கேற்றார். பிரச்சினைகளை இரு அணிகளுமே தீர்ந்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

குறிப்பாக எமது கட்சியிலும் நான்கு ஐந்து கருப்பு புள்ளிகள் உள்ளன. அந்த புள்ளிகள் வேண்டுமானால் அகில விராஜுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடட்டும். கருப்பு புள்ளிகளை வெளியேற்றுவதற்கு எமக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இதுவாகும்.” – என்றார்.

ரணில் தரப்பு…..

அதேவேளை, சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரணில் ஆதரவு அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார,

” ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் சில சரத்துகளிலுள்ள பயங்கர நிலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு கருஜயசூரிய இதன்போது கோரியுள்ளார். எனினும், சஜித் தரப்பு அவற்றை வழங்கவில்லை. இதுவே உண்மை.

எனவே, இது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கின்றேன். அப்போது பொய்யுரைப்பது யார், மெய் பேசுவது யாரென்பது தெரியவரும்.” – என்றார்.

அத்துடன், ” யானையில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சிலரே சஜித்தின் முதுகில்ஏறி சவாரி செய்வதற்கு முயற்சிக்கின்றனர். சஜித்தை தவறாகவும் வழிநடத்துகின்றனர். எனவே, கட்சியை அழிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று தயாகமகே இதன்போது கூறினார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv