விஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேருடன் இன்று மதியம் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருக்கு 69ம் எண் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அவர் அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவர் தனக்கு விசில் சின்னம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை அந்த சின்னம் கிடைக்கவில்லையெனில், படகு, கேரம் போர்டு ஆகிய சின்னங்களை ஒதுக்கித் தருமாறு அவர் கேட்டுள்ளார். ஏற்கனவே தனக்கு தொப்பி சின்னத்தை அளிக்குமாறு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கேட்டிருந்த மாற்று சின்னங்களில் விசில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *