என் கணவரை கொலை செய்தது யார்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ராஜஸ்தானில் சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியனை அவரது சக ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் கூறப்பட்டு வரும் நிலையில் முனிசேகர் மீது இன்று காலை வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, ‘எனது கணவர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விசாரணை நடத்தி எனக்கு தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் பானுரேகா மேலும் தெரிவித்தார்.

மேலும் முனிசேகரும், தம்முடைய கணவரும் நல்ல நண்பர்கள் என்றும், இருப்பினும் இந்த விவகாரத்தில் மனசாட்சிப்படி விசாரணை செய்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *