பலமுறை கண்டித்தோம் ; அவர் திருந்தவில்லை : ஜெயக்குமார் தம்பி பகீர் பேட்டி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு ஜெயக்குமாரின் சகோதரர் சாந்தகுமார் பல அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “என் அண்ணன் ஜெயக்குமார் அமைச்சரான பின்பு அவரின் நடவடிக்கை மாறிவிட்டது. அவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். என் அண்ணனை பற்றி பேசி எனக்கே அவமானமாக இருக்கிறது. என் குடும்பத்தினர் கண்டித்தும் அவர் திருந்தவில்லை. ஆடியோ விவகாரத்தில் அனைத்தும் உண்மைதான். அதற்கு நானே சாட்சி. இல்லையென மறுத்தால் ஆதாரத்தை வெளியிடுவேன்” எனக் கூறி சாந்தகுமார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சாந்தகுமார் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.