விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது.

அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு.

இவரது ரசிகர்கள் மக்கள் பலருக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள். மேலும், தற்போதைக்கு ரஜினி மற்றும் கமல் அரசியலில் குதித்துள்ளதால், அவர்களது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இவரை தொடர்ந்து நடிகர் விஜய்யும் அரசியலில் கால் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியது இது தான்: ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன். ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதை கேட்டால் விஜய் அரசியலில் கால் வைக்க விஜய்யின் தந்தை முயற்சிகள் செய்து வருவது போல் தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *