ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார்.

ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் 1, 76,885 வாக்குகள் பதிவானது. அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

இதில், முதல் சுற்று எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். அவர் தற்போதைய நிலவரப்படி,

டிடிவி தினகரன் (சுயேட்சை) 7276

மதுசூதனன் (அதிமுக) 2738

மருதுகணேஷ் (திமுக) 1182

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 258

கரு.நாகராஜன் (பாஜக) 66

நோட்டோ 122

சுயேட்சைகள் 0

இதில் முக்கியமாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 4538 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *