கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஜெனீவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்தார்.

ஆதரவு தெரிவித்துவிட்டு திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் அருகில் இருந்த தேனீர் கடைக்குச் சென்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலிசார் தேனீர் கடை அருகில் நின்றிருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோரையும் கைதாக வலியுறுத்தினர்.

ஆனால் தங்களுக்கும் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்றும் தேனீர் கடைக்கு வந்ததாகவும் திருமுருகன் காந்தி தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காமல் அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருமுருகன் காந்தி அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *