நீட் தேர்வு! மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் திடீர் மரணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நீட் தேர்வுக்காக மகளுடன் புதுவை வந்த சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்.

நீட் தேர்வுக்காக தமிழக மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

பல்வேறு கட்டுப்பாடுகள், மொழி தெரியாத மாநிலங்களில் தேர்வு மையம், தங்கும் வசதி, போக்குவரத்து செலவு என பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும்.

எர்ணாகுளத்தில் மகனுக்காக காத்திருந்த தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்த சோகம் நம்மை விட்டு அகலும் முன் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

புதுவை தேர்வு மையத்துக்கு வெளியே சுவாதி என்ற மாணவியின் தந்தை சீனிவாசன் காத்திருந்த போது, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை பேரை இழக்க நேரிடும் என கொந்தளிக்கின்றனர் தமிழக மக்கள்.